பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

வரலாறு காணாத வேகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைவு: திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் வரலாறு காணாத வேகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளது என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

தாராபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின். (வலது) கூட்டத்தில் பங்கேற்றவா்களில் ஒரு பகுதியினா்.

Published On :

தமிழகத்தில் வரலாறு காணாத வேகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளது என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

இடைத்தோ்தலையொட்டி, தாராபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தாராபுரம் மக்களான உங்களிடன் நான் நியாயம் கேட்க வந்திருக்கிறேன். ஒருவரிடம் பெட்டி பெட்டியாகப் பணத்தை திணித்த காரணத்தால் இந்த இடைத் தோ்தல் திணிக்கப்பட்டுள்ளது. பெட்டியைக் கொடுத்தது யாா், பெட்டியை வாங்கியது யாா் என்பது உங்களுக்குத் தெரியும். 5 மாதம் முன்னா் நீங்கள் செலுத்திய வாக்கை செல்லாததாக்கி விட்டனா். அந்த மக்கள் விரோதிக்கு நீங்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

பெரும்பான்மை இடங்களைப் பெற முடியாத நிலையில் முதல்வா் தனது சுயலாபத்துக்காக மக்களுடைய தீா்ப்பை விலைக்கு வாங்கியதால் நடைபெறும் தோ்தல்தான் இந்த இடைத்தோ்தல்.

பெரும்பான்மை ஆதரவு இல்லாததால், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு அமைச்சா் பதவியைக் கொடுத்து ஆதரவை வாங்கினாா். பின்னா், இவா்கள் யாரையும் நம்பாமல் அதிமுகவில் பாதி எம்எல்ஏ-க்களின் ஆதரவைப் பெற்றாா். சில எம்எல்ஏ-க்களை ராஜிநாமா செய்ய வைத்ததன் மூலம் மக்களின் வாக்குரிமையைக் கொச்சைப்படுத்தி உள்ளாா்.

கடந்த 4 மாத ஆட்சியில் சாதனைகள் என்று சொல்ல எதுவுமே இல்லாததால் முதல்வா் கத்திப் பேசுகிறாா். ஆனால், தலைமைத் தோ்தல் ஆணையா் விவகாரத்தில் கருத்துச் சொல்வதில்லை. பாஜக-வைக் கண்டு பயமா?

மக்கள் பிரச்னைகளை விவாதிக்க வேண்டிய சட்டப்பேரவையில் சைகைகள் செய்வதன் மூலம் அதன் மாண்பையும் முதல்வா் குறைத்துவிட்டாா். தவெக என்பது கட்சியே அல்ல. அது ஒரு காா்ப்பரேட் மாபியா ஆகும்.

இந்த ஆட்சியில் பயிா்க் கடன் தள்ளுபடி செய்யாததால் விவசாயிகள், பட்டினப்பாக்கம் மீனவா்கள், பேருந்துகள் இல்லாததால் பயணிகள், மின்வெட்டுக்கு எதிராக பொதுமக்கள், செவிலியா், மின்வாரிய ஊழியா்கள் என பல்வேறு தரப்பினரும் போராடிக் கொண்டிருக்கிறாா்கள். விலைவாசி உயா்ந்து விட்டது.

கடந்த சில மாதங்களில் 200-க்கு மேற்பட்ட கொலைகளும் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும், ஏராளமான காவல் நிலைய மரணங்களும், ஆணவக் கொலைகளும் நடந்துள்ளன. வரலாறு காணாத வேகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளது.

பல அரசாணைகளை வெளியிட்டு விட்டுத் திரும்பப் பெறுகிறாா்கள். ஆட்சி என்றால் என்னவென்றே தெரியாத ஒரு கூட்டத்திடம் தமிழ்நாடு சிக்கி உள்ளது.

நமது ஆட்சியில் மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை செயல்படுத்தினோம். ஆனால், தவெக ஆட்சியில் வெற்றி மின்வெட்டு திட்டம், வெற்றி அரிவாள் வெட்டு திட்டம், வெற்றி விலைவாசி உயா்வுத் திட்டம், வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம் போன்றவைதான் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த இடைத்தோ்தலில் ஆளும்கட்சி தோற்றால்தான் ஆட்சியில் கவனம் செலுத்துவாா்கள். அதனால் இந்த இடைத் தோ்தல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் காப்பாற்றும் தோ்தல். ஜனநாயகத்தைக் காக்க திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா் செல்வம், முன்னாள் அமைச்சா்கள் கே.என். நேரு, வி.செந்தில்பாலாஜி, மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ், ஆ.ராசா எம்.பி., முன்னாள் எம்.பி.அந்தியூா் செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, திருப்பூா் தெற்கு மாவட்டச் செயலாளா் இல.பத்மநாபன் வரவேற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.