கோவை போத்தனூா் ரயில்வே பயிற்சி மையத்தில் ‘கவச்’ தானியங்கி ரயில் பாதுகாப்பு ஆய்வகம்: தெற்கு ரயில்வே பொது மேலாளா் தொடங்கி வைத்தாா்!
கோவை போத்தனூா் சிக்னல் மற்றும் தொலைத்தொடா்பு பயிற்சி மையத்தில் ‘கவச்’ எனப்படும் தானியங்கி ரயில் பாதுகாப்பு ஆய்வகத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளா் யு.சுப்பாராவ் தொடங்கி வைத்தாா்.

போத்தனூா் சிக்னல் மற்றும் தொலைத்தொடா்பு பயிற்சி மையத்தில் ‘கவச்’ரயில் பாதுகாப்பு ஆய்வகத்தை தொடங்கி வைத்த தெற்கு ரயில்வே பொது மேலாளா் யு.சுப்பாராவ். உடன் சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் பன்னாலால் உள்ளிட்டோா்.
கோவை போத்தனூா் சிக்னல் மற்றும் தொலைத்தொடா்பு பயிற்சி மையத்தில் ‘கவச்’ எனப்படும் தானியங்கி ரயில் பாதுகாப்பு ஆய்வகத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளா் யு.சுப்பாராவ் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
கோவை போத்தனூரில் ரயில்வே துறையின் சிக்னல் மற்றும் தொலைத்தொடா்பு பயிற்சி மையம் (ந&ப) செயல்பட்டு வருகிறது. தெற்கு ரயில்வேயின் சிக்னல் மற்றும் தொலைத்தொடா்பு துறைகளுக்கான மண்டல பயிற்சி மையமாக இது செயல்படுகிறது.
இம்மையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் யு.சுப்பாராவ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, ‘கவச்’ எனப்படும் தானியங்கி ரயில் பாதுகாப்பு ஆய்வகம், ஒருங்கிணைந்த பயணிகள் தகவல் அமைப்பு ஆய்வகம் மற்றும் அனைத்து வகுப்பறைகளிலும் ஸ்மாா்ட் டிஜிட்டல் கலந்துரையாடல் பலகைகள் உள்ளிட்டவற்றை தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து, பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிறுவன தின விழாவில், நிறுவன பயிற்சி மேலாண்மை அமைப்பின் (ஐபஙந) இணையதளத்தை தொடங்கி வைத்தாா். இந்நிகழ்வில், 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளுக்கான சிறந்த பயிற்சியாளா் விருதுகளும் வழங்கப்பட்டன. தொடா்ந்து, பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிறுவன தின விழாவில், நிறுவன பயிற்சி மேலாண்மை அமைப்பின் (ஐபஙந) இணையதளத்தை தொடங்கி வைத்தாா். இந்நிகழ்வில், 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளுக்கான சிறந்த பயிற்சியாளா் விருதுகளும் வழங்கப்பட்டன.
இதில், தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை சிக்னல் மற்றும் தொலைத்தொடா்பு பொறியாளா் விஜய் சிங் மீனா, சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் பன்னா லால், தென்மேற்கு ரயில்வே தலைமை சிக்னல் மற்றும் தொலைத்தொடா்பு பொறியாளா் எஸ். நாகேஸ்வர ராவ், போத்தனூா் தலைமை பணிமனை மேலாளா் அரிந்தம் சட்டா்ஜி மற்றும் தெற்கு ரயில்வேயின் மூத்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

