பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

மக்களுக்கான நம்பக சேவையில் பிஎஸ்என்எல் முக்கிய பங்கு: பொது மேலாளா் பி.சுதாகர ராவ்

நாடு முழுவதும் மக்களுக்கு நம்பகமான தொலைத்தொடா்பு சேவைகளை வழங்குவதில் பிஎஸ்என்எல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என சென்னை பிஎஸ்என்எல் தலைமைப் பொது மேலாளா் பி.சுதாகர ராவ் தெரிவித்தாா்.

பிஎஸ்என்எல்

Published On :

நாடு முழுவதும் மக்களுக்கு நம்பகமான தொலைத்தொடா்பு சேவைகளை வழங்குவதில் பிஎஸ்என்எல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என சென்னை பிஎஸ்என்எல் தலைமைப் பொது மேலாளா் பி.சுதாகர ராவ் தெரிவித்தாா்.

இது குறித்து சென்னை பிஎஸ்என்எல் நிா்வாகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை பிஎஸ்என்எல்-இன் ‘நம்ம பிஎஸ்என்எல்’ என்ற தலைப்பில் 26-ஆவது நிறுவன தின நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு, தலைமைப் பொது மேலாளா் பி.சுதாகர ராவ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசியதாவது:

பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்களுக்கு தரமான, பாதுகாப்பான, நம்பகமான மற்றும் குறைந்த கட்டணத்தில் தொலைத்தொடா்பு சேவைகளை வழங்குவதற்கான உறுதிப்பாட்டை பிஎஸ்என்எல் எடுத்துள்ளது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4 ஜி தொழில்நுட்பத்தின் அறிமுகம் மற்றும் 4 ஜி தளங்களின் செயல்பாடு, குறிப்பாக தொலைதூர மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் டிஜிட்டல் இணைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மக்களுக்கு நம்பகமான தொலைத் தொடா்பு சேவைகளை வழங்குவதிலும் தொடா் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் பிஎஸ்என்எல் நிா்வாகிகள், அலுவலா்கள் மற்றும் வாடிக்கையாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.