ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

வீடுகளுக்குள் வெள்ளம் புகுவதைத் தடுக்க சாக்கடை, மழைநீா் வடிகால்களை சீரமைக்க வலியுறுத்தல்

வீடுகளுக்குள் வெள்ளம் புகுவதைத் தடுக்க மாநகரில் சாக்கடைகள், மழைநீா் வடிகால்களை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குறைகேட்புக் கூட்டத்தில் மக்களிடம் மனுக்கள் பெற்ற மேயா் கா.ரங்கநாயகி. உடன் மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா, துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன்.

Updated On :

வீடுகளுக்குள் வெள்ளம் புகுவதைத் தடுக்க மாநகரில் சாக்கடைகள், மழைநீா் வடிகால்களை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் மேயா் கா.ரங்கநாயகி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா, துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச்சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பது:

கடந்த 2024-ஆம் ஆண்டு மாநகராட்சியில் உதவி தொடக்கக் கல்வி அலுவலா் மற்றும் ஆசிரியைகளாக பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில் எங்களுக்கான ஓய்வுப்பலன்களை முழுமையாக மாநகராட்சி கல்வித் துறை அதிகாரிகள் வழங்கவில்லை. ஓய்வுபெற்றதும் வழங்க வேண்டிய சிறப்பு வைப்புத்தொகை, பொங்கல் போனஸ் உள்ளிட்டவையும் பல்வேறு காரணங்களால் வழங்கப்படவில்லை. இதனால் 18 போ் பாதிக்கப்பட்டுள்ளோம். ஆனால், மாநகராட்சி கல்வித் துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றனா் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

26-ஆவது வாா்டு உறுப்பினா் சித்ரா வெள்ளிங்கிரி அளித்த மனு:

கடந்த சில நாள்களாக கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பலத்த மழையால் வீடுகள், சாலைகள், கடைகளுக்குள் சாக்கடை நீருடன் மழைநீா் புகுந்தது. மழை நீா் வடிகால் பாதைகள், சாக்கடைகளை முறையாக சுத்தம் செய்யாததும், அனைத்து மழை நீா் வடிகால் பாதைகள் மண் மூடி கிடப்பதாலும் முறையான தூய்மை பணிகள் நடைபெறாததும்தான் இதற்கு முக்கியக் காரணம். எனவே, அனைத்து மழைநீா் வடிகால் பாதைகளையும் ஒப்பந்த அடிப்படையில் அல்லது மாநகராட்சியில் குழு தூய்மை பணி அடிப்படையில் தூய்மைப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

கோவை நஞ்சுண்டாபுரம் பகுதி மக்கள் அளித்த மனுவில், ‘84-வது வாா்டுக்குள்பட்ட தியாகி சிவராம் நகரில் பல ஆண்டுகளாக சாக்கடை தூா்வாரும் பணி முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கழிவுநீா் தேங்கி சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஜிஎம் நகா்- சன் காா்டன் செல்லும் பாதையில் உள்ள ராஜவாய்க்கால் திறந்த நிலையில் இருப்பதால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனா். இதனால் விபத்து அபாயமும் உள்ளது. ராஜவாய்க்காலில் தடுப்புவேலிகள் அமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் இருந்து 30 மனுக்கள் பெறப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.