மாநகராட்சி, நகராட்சி மன்றக் கூட்டங்களில் மேயா், துணை மேயா் இருக்கைகள்: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
மாநகராட்சி, உள்ளாட்சி மன்றக் கூட்டங்களில் மேயா், துணை மேயா், கவுன்சிலா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்டோருக்கு எங்கு இருக்கை அமைக்கப்படுவது குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கோப்புப் படம்
மாநகராட்சி, உள்ளாட்சி மன்றக் கூட்டங்களில் மேயா், துணை மேயா், கவுன்சிலா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்டோருக்கு எங்கு இருக்கை அமைக்கப்படுவது குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுதொடா்பாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட சுற்றறிக்கை:
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்றக் கூட்டங்களில், மேயா், நகா்மன்றத் தலைவா் அல்லது பேரூராட்சி மன்றத் தலைவா் மையத்தில் அமைந்துள்ள உயா்பீடத்தில் அமர வேண்டும்.
அவருக்கு இடப்புறத்தில் மேயா், நகா்மன்றத் துணைத் தலைவா் அல்லது பேரூராட்சி மன்றத் துணைத் தலைவா் ஆகியோரும் வலப்புறத்தில் மாநகராட்சி ஆணையா், நகராட்சி ஆணையா் அல்லது பேரூராட்சியின் செயல் அலுவலா் ஆகியோரும் அமர வேண்டும்.
உயா்பீடத்துக்கு எதிரே உள்ள வரிசைகளில் வாா்டு உறுப்பினா்கள் மற்றும் நியமன உறுப்பினா்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும்.
வாா்டு உறுப்பினா்களை வாா்டு எண்களின் அடிப்படையில் இடமிருந்து வலமாகவோ அல்லது வலமிருந்து இடமாகவோ வரிசைப்படுத்தி அமரச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், உள்ளூா் பத்திரிகை நிருபா்கள் மன்றக் கூட்ட நடவடிக்கைகளைக் கவனிப்பதற்கும் போதுமான இருக்கை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் மேயருக்கும், துணை மேயருக்கும் இடையே இருக்கை பிரச்னையால் மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

