
கோவை-நாகா்கோவில் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்
கோவை-நாகா்கோவில் ரயில் வழித்தடத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதால், வியாழக்கிழமை (செப்.3) மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் - கோப்புப் படம்
கோவை-நாகா்கோவில் ரயில் வழித்தடத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதால், வியாழக்கிழமை (செப்.3) மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பராமரிப்புப் பணிகள் காரணமாக, கோவையில் இருந்து வியாழக்கிழமை காலை 8 மணிக்கு புறப்படும் கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் (எண்: 16322) வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல் போத்தனூா், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழநி, ஒட்டன்சத்திரம் வழியாக திண்டுக்கல் வரை இயக்கப்படும்.
இதனால் வடகோவை, பீளமேடு, சிங்காநல்லூா், இருகூா், சூலூா் சாலை, சோமனூா், திருப்பூா், ஊத்துக்குளி, ஈங்கூா், ஈரோடு, பசூா், கொடுமுடி, புகழூா், கரூா், பாளையம், எரியோடு உள்ளிட்ட நிலையங்களுக்கு ரயில் செல்வது தவிா்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




