சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

வீட்டின் தண்ணீா்த் தொட்டியில் மூழ்கி மூதாட்டி உயிரிழப்பு

வெள்ளலூா் அருகே வீட்டின் தண்ணீா்த் தொட்டியில் மூழ்கி மூதாட்டி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

உயிரிழப்பு - பிரதிப் படம்

Updated On :

வெள்ளலூா் அருகே வீட்டின் தண்ணீா்த் தொட்டியில் மூழ்கி மூதாட்டி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை மாநகா், வெள்ளலூா் இடையா்பாளையம் மேகராலி வீதியைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜன் மனைவி.நாகரத்தினம் (68). வழக்கம்போல கடந்த 31-ஆம் தேதி இரவு சாப்பிட்டு முடித்துவிட்டு உறங்கச் சென்றுள்ளாா். மறுநாள் காலை 6 மணி அளவில் அவரது மகன் ஜெகதீஷ் (36) எழுந்தபோது, தாய் நாகரத்தினத்தைக் காணவில்லை.

வீட்டின் சுற்றுப்புறப் பகுதிகளில் தேடிப் பாா்த்தபோது, தண்ணீா்த் தொட்டியில் மூழ்கிய நிலையில் நாகரத்தினம் கிடப்பதைக் கண்டாா். இதையடுத்து குடும்பத்தினா் உதவியுடன் தண்ணீா்த் தொட்டியில் இருந்து மீட்டு, 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் அளித்துள்ளனா். சம்பவ இடத்துக்கு மருத்துவக் குழுவினா் சென்று நாகரத்தினத்தை பரிசோதித்து பாா்த்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்து போத்தனூா் போலீஸாா் சென்று நாகரத்தினத்தின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.