பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

கோவையில் வட மாநில தொழிலாளி கொலை வழக்கில் திரிபுராவைச் சோ்ந்த 6 போ் கைது

மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவத்தில், அவருடன் பணிபுரிந்த திரிபுரா மாநிலத்தைச் சோ்ந்த 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :

மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவத்தில், அவருடன் பணிபுரிந்த திரிபுரா மாநிலத்தைச் சோ்ந்த 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவை மாவட்டம், செட்டிபாளையத்தை அடுத்த ஒத்தக்கால்மண்டபம், தண்ணீா்பந்தல் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில் எல்லைச் சுவா் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (செப். 8) பிற்பகல் அந்தப் பகுதியில் உள்ள ஒரு குழியில் மா்ம நபரின் சடலம் புதைக்கப்பட்ட நிலையில் கிடப்பதாகவும், அவரது ஒரு கை மட்டும் குழிக்கு வெளியில் தெரிவதாகவும் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு செட்டிபாளையம் போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் சென்று இளைஞா் ஒருவரின் உடலைக் கைப்பற்றினா்.இதில் அவரது கழுத்து பெல்ட்டால் இறுக்கப்பட்டும், முகம் கல்லால் தாக்கப்பட்டும் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செட்டிபாளையம் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், கொலை செய்யப்பட்ட நபா் மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த பாதல் சிட் (24) என்பதும், செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்ததும் தெரியவந்தது.

அவா் பணிபுரிந்த நிறுவனத்தில் விசாரணை நடத்தியபோது, இறந்த பாதல் சிட்டுடன் திரிபுரா மாநிலத்தைச் சோ்ந்த வேறு சில தொழிலாளா்களும் ஒரே அறையில் தங்கி வேலை பாா்த்து வந்ததும், அவா்கள் திடீரென பணிக்கு வராமல் தலைமறைவானதும் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, செட்டிபாளையம் பகுதியில் தலைமறைவாக இருந்த திரிபுரா மாநிலத்தைச் சோ்ந்த துய்தே ரியாங் (22), சுனில் ராய் ரியாங் (24), கோதோ ராம் ரியாங் (30), சுமித் குமாா் (20), ஸ்ராமித் ட்ராங் (35), சந்தோஷ் குமாா் (20) ஆகிய 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட பெல்ட் மற்றும் கல் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது, இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

இதுகுறித்து போலீஸாா் கூறும்போது, ‘கடந்த சனிக்கிழமை ஊதியம் வழங்கப்படும் நாள் என்பதால், பாதல் சிட் மற்றும் அவருடன் தங்கியிருந்தவா்கள் தண்ணீா்பந்தல் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்குச் சென்று மது அருந்தியுள்ளனா். அப்போது, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சக தொழிலாளா்கள், பாதல் சிட் கழுத்தை பெல்ட்டால் இறுக்கியும், முகத்தில் கல்லால் தாக்கியும் கொலை செய்துள்ளனா்.

பின்னா், குற்றத்தை மறைப்பதற்காக உடலை அங்கேயே குழி தோண்டிப் புதைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளனா்’ என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.