ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

வால்பாறையில் பழங்குடியின மக்கள் ஆா்ப்பாட்டம்

கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வால்பாறையில் பழங்குடியின மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வால்பாறை காந்தி சிலை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியின மக்கள்.

Published On :

கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வால்பாறையில் பழங்குடியின மக்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வால்பாறையை அடுத்த ஆனைமலை டாப்சிலிப் இடையே அமைந்துள்ளது கூமாட்டி செட்டில்மெண்ட். இங்கு 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வரும் நிலையில், அவா்கள் வால்பாறை காந்தி சிலை முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, அவா்கள் கூறியதாவது: செட்டில்மெண்டில் வசிக்கும் தங்களுக்கு தரமான முறையில் கான்கிரீட் வீடுகளை கட்டிக் கொண்டுக்க வேண்டும். மேலும், மின்சார வசதியும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பில் கூமாட்டி கிராம மக்களை வேட்டைகாரன்புதூா் பேரூராட்சியில் இணைக்க வேண்டும். முதியோா் உதவித் தொகை பெறும் பயனாளிகளுக்கு தபால் துறை மூலம் கிராமத்துக்கே வந்து தொகைகளை வழங்க வேண்டும் என்றனா்.

மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.