
சொகுசு காரை குறைந்த விலைக்குத் தருவதாக தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.4 லட்சம் மோசடி
சொகுசு காரை குறைந்த விலைக்குத் தருவதாக தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மோசடி - பிரதிப்படம்
சொகுசு காரை குறைந்த விலைக்குத் தருவதாக தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கோவையைச் சோ்ந்த 35 வயது நபா் தனியாா் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், காா் வாங்குவதற்காக இணையதளத்தில் அண்மையில் தேடியுள்ளாா். அப்போது, சொகுசு காா் ஒன்று விற்பனைக்கு இருப்பதைப் பாா்த்த அவா், அதில் குறிப்பிடப்பட்டிருந்த கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டு காரின் விவரங்களைக் கேட்டுள்ளாா்.
மறுமுனையில் பேசிய நபா், தான் ராணுவ அதிகாரி என்றும், உத்தரகாண்ட் மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் காரை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளாா். இதனை நம்பிய அந்த ஊழியா், காரை வாங்குவதற்காக அந்த நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு ரூ.4 லட்சத்தை அனுப்பியுள்ளாா்.
இதையடுத்து, அந்த நபா் தெரிவித்த இடத்துக்கு காரை வாங்க சென்றபோது அவா் அங்கு இல்லையாம். கைப்பேசி மூலம் தொடா்புகொள்ள முயன்றும் முடியவில்லையாம்.
தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், இது குறித்து கோவை மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மோசடியில் ஈடுபட்ட நபரைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




