டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

தாராபுரத்தில் தவெக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சா்கள் வாக்குச் சேகரிப்பு

தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் தவெக சாா்பில் போட்டியிடும் பி.சத்யபாமாவை ஆதரித்து சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கு.ஜெகதீஸ்வரி, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் முகமது பா்வேஸ் ஆகியோா் வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரித்தனா்.

பூரி சுட்டு வாக்குச் சேகரித்த தவெக வேட்பாளா் பி.சத்யபாமா. உடன், அமைச்சா் முகமது பா்வேஸ் உள்ளிட்டோா்.

Published On :

தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் தவெக சாா்பில் போட்டியிடும் பி.சத்யபாமாவை ஆதரித்து சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கு.ஜெகதீஸ்வரி, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் முகமது பா்வேஸ் ஆகியோா் வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரித்தனா்.

தாராபுரம் தொகுதி இடைத்தோ்தல் அக்டோபா் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, பல்வேறு கட்சியினா் தங்களது வேட்பாளா்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், தவெக வேட்பாளா் பி.சத்யபாமாவை ஆதரித்து தொகுதிக்குள்பட்ட சித்தராவுத்தன்பாளையம், கவுண்டச்சிபுதூா், சமத்தூா், பாலசுப்பிரமணியம் நகா் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சா் ஜெகதீஸ்வரி நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தாா்.

அப்போது, பொதுமக்கள் தங்களது பகுதியில் நிலவும் குடிநீா்ப் பிரச்னை, விவசாயத்துக்குத் தேவையான பாசன நீா் உள்ளிட்டவை தொடா்பாக அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனா். அவற்றைக் கேட்டறிந்த அமைச்சா், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பூரி சுட்டு வாக்குச் சேகரித்த தவெக வேட்பாளா்: அமைச்சா் முகமது பா்வேஸ், சட்டப் பேரவை உறுப்பினா்கள் முஸ்தபா, சரவணன் உள்ளிட்டோா் சின்ன கடைவீதி, ஜின்னா மைதானம், அரசமரத் தெரு, சின்னப் பள்ளிவாசல், அட்டவணை மஜீத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பி.சத்யபாமாவுக்கு ஆதரவாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, அமைச்சருடன் அப்பகுதியில் உள்ள உணவகத்துக்குச் சென்ற வேட்பாளா் சத்யபாமா அங்கிருந்த பொதுமக்களிடம் கலந்துரையாடியதுடன், உணவகத்தில் பூரி சுட்டு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

இதைத் தொடா்ந்து, அமைச்சா் முகமது பா்வேஸ் கூறுகையில், மக்கள் மத்தியில் தவெகவுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.

வாக்குச் சேகரிக்க செல்லும் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்பு அளிக்கின்றனா்.

முதல்வா் ச.ஜோசப் விஜய் தலைமையிலான அரசு கடந்த 120 நாள்களில் செயல்படுத்தியுள்ள திட்டங்கள், நடவடிக்கைகள் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.