இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

அந்தியூர் வனப் பகுதியில் மான் வேட்டையாட முயன்ற 8 பேர் கைது

அந்தியூர் வனப் பகுதியில் மான் வேட்டையாட முயன்ற 8 பேர் கொண்ட கும்பலை வனத் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 12:11 am

DIN

அந்தியூர் வனப் பகுதியில் மான் வேட்டையாட முயன்ற 8 பேர் கொண்ட கும்பலை வனத் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர். இவர்களிடமிருந்து, வேட்டைக்குப் பயன்படுத்தப்படும் கன்னி,  4 நாட்டுத் துப்பாக்கிகள், வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழக - கர்நாடக எல்லையான பாலாறு பகுதியில் மான் வேட்டையாடும் சம்பவம் நடைபெறுவதாக சென்னம்பட்டி வனத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்து. இதையடுத்து,  அடர்ந்த வனப் பகுதியில் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தபோது ஒரு கும்பல் வனத் துறையினரைக் கண்டதும் தப்பியோட முயன்றது. அவர்களை சுற்றிவளைத்து வனத் துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள்,  சேலம் மாவட்டம்,  மேட்டூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (42),  வாசன் (49), செல்வன் (50), செந்தில்குமார் (44),  பாலு (46),  சண்முகராஜா (43),  பச்சியண்ணன் (26),  ரமேஷ் (18) என்பது தெரிந்தது. மேலும், அவர்களிடமிருந்து மான் வேட்டைக்கு வைக்கப்படும் இரும்புக் கன்னி,  4 நாட்டுத் துப்பாக்கிகள், வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.  இவர்கள் மீது அனுமதியின்றி துப்பாக்கிகள் வைத்திருந்ததாக வெள்ளிதிருப்பூர் போலீஸார்  வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.