எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கூட்டுறவு கைத்தறித் துணிநூல் ஆலையில் முதன்மைச் செயலர் ஆய்வு

தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறித் துணிநூல் ஆலையில் ரூ. 2.20 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும்  பராமரிப்புப் பணிகளை கைத்தறி,  கதர்த் துறையின்

News image
Updated On :20 அக்டோபர் 2017, 12:06 am

DIN

தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறித் துணிநூல் ஆலையில் ரூ. 2.20 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும்  பராமரிப்புப் பணிகளை கைத்தறி,  கதர்த் துறையின் முதன்மைச் செயலர் க.பணீந்தர ரெட்டி புதன்கிழமை ஆய்வுசெய்தார்.
ஈரோடு  அசோகபுரத்தில் உள்ள ஆலைக்குப் புதன்கிழமை வந்த பணீந்தர ரெட்டி,  தமிழ்நாடு பஞ்சாலைக் கழகம்,  தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் போன்ற முகமை நிறுவனங்களிலிருந்து பெறப்படும் துணி ரகங்கள் எவ்வாறு பதனிடப்படுகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
 மேலும், ஆலையின் மடிப்பு பிரிவில் தமிழக அரசின் சீருடை திட்ட மாதிரித் துணிகள்,  கேரள அரசின் சீருடை திட்ட மாதிரி துணிகள்,  இதர நிறுவனங்களின் துணிகள், கிரே செக்கிங்,  துணி தைத்தல், பிளீச்சிங் செய்தல், பாலிஸ்டர் சாயமிடுதல், காட்டன் சாயமிடுதல்,  துணி உலர வைத்தல்,  துணி ரகங்கள் பிளிசிங் செய்தல், துணி மடித்தல், பொட்டலம் செய்தல் பணிகளையும் பார்வையிட்டார்.
இந்த ஆலையில் தற்போது தேசிய கைத்தறி வளர்ச்சித் திட்டத்தின் மூலம் ரூ.2.20 கோடி மதிப்பிலான புதிய இயந்திரங்கள் நிறுவுதல், தொழிற்சாலை, அலுவலக கட்டடங்களைப் பழுதுபார்த்தல்,  புனரமைத்தல் போன்ற பணிகளையும் பணீந்தர ரெட்டி ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர், தமிழ்நாடு கூட்டுறவுத் துணிநூல் பதனிடும் ஆலையின் தலைவர் எம்.ஜி.பழனிசாமி, தமிழ்நாடு கூட்டுறவுத் துணிநூல் பதனிடும் ஆலையின் நிர்வாக இயக்குநர் எஸ்.சண்முகசுந்தரம்,  கைத்தறி, துணிநூல் துறையின் உதவி இயக்குநர் எஸ்.பிச்சைமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.