பல்கலை. மகளிர் கால்பந்துப் போட்டி: கொங்கு கலைக் கல்லூரி 2-ஆவது இடம்
பாரதியார் பல்கலைக்கழக அளவிலான மகளிர் கால்பந்துப் போட்டியில் கொங்கு கலை, அறிவியல் கல்லூரி அணி 2-ஆவது இடத்தைப் பிடித்தது.


பாரதியார் பல்கலைக்கழக அளவிலான மகளிர் கால்பந்துப் போட்டியில் கொங்கு கலை, அறிவியல் கல்லூரி அணி 2-ஆவது இடத்தைப் பிடித்தது.
ஈரோடு அருகே திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியில் பாரதியார் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மகளிர் கால்பந்து போட்டி அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் 8 கல்லூரி அணிகள் கலந்துகொண்டன.
இதில், கொங்கு கலை, அறிவியல் கல்லூரி அணி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக கொங்கு கலை, அறிவியல் கல்லூரி அணி இரண்டாவகு இடத்தைப் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியின் மூலம் பாரதியார் பல்கலைக்கழக மகளிர் கால்பந்து அணிக்கான 20 வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள அனைத்திந்திய பல்கலைக்கழகத்துக்கு இடையேயான கால்பந்துப் போட்டியில் பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் இவர்கள் விளையாட உள்ளனர்.
போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளை கொங்கு கலை, அறிவியல் கல்லூரியின் தாளாளர் ஏ.கே.இளங்கோ, முதல்வர் ச.ராமன், உடற்கல்வி இயக்குநர் சங்கர், துணை உடற்கல்வி இயக்குநர் வனிதா, பயிற்சியாளர் பிரபாகரன் ஆகியோர் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...