ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களைச் சார்ந்த பின்வரும் கிராமங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 20) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்:
ஈரோடு வட்டம் - சர்க்கார் பெரிய அக்ரஹாரம் அரை நாகம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகம், மொடக்குறிச்சி வட்டம் - கஸ்பாபோட்டை கிராம நிர்வாக அலுவலகம், கொடுமுடிவட்டம் - எழுநூத்திமங்கலம் வேலாயுதம்பாளையம் சமுதாயக்கூடம், பெருந்துறை வட்டம் - குப்பிச்சிபாளையம் புதுவலசு ஊராட்சி அலுவலகம். பவானி வட்டம் - கேசரி மங்கலம் ஊராட்சி அலுவலகம், அந்தியூர் வட்டம் - பூனாட்சி ஊராட்சி நடுநிலைப் பள்ளி, கோபிசெட்டிபாளையம் வட்டம் - அரக்கன்கோட்டை ஏளூர் சமுதாயக்கூடம், சத்தியமங்கலம் வட்டம் - புங்கம்பள்ளி சமுதாயக்கூடம், தாளவாடி வட்டம் மல்லான்குழி ஓங்கள்புரம், நம்பியூர் வட்டம் - அஞ்சானூர் ஊராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெறும் முகாம்களில் தொடர்புடைய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து உரிய தீர்வைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








