குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

அவல்பூந்துறையில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் விரைவில் அகற்றப்படும்: அதிகாரிகள் தகவல்

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அவல்பூந்துறை நால்ரோட்டில் நெடுஞ்சாலைத் துறை சாலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட

Updated On :19 ஏப்ரல் 2018, 1:19 am IST

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அவல்பூந்துறை நால்ரோட்டில் நெடுஞ்சாலைத் துறை சாலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவல்பூந்துறை நால்ரோட்டில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இருந்த பயணிகள் நிழற்குடை பழுதாகி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று  மொடக்குறிச்சி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வி.பி.சிவசுப்பிரமணி தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் ரூபாய் ஒதுக்கி புதிய பயணிகள் நிழற்குடை அமைப்பதற்காக, 2016-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி பூமி பூஜை போடப்பட்டது.
இந்த நிழற்குடை அமைப்பதை எதிர்த்து சிலர் ஈரோடு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததால்,   நிழற்குடை அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், அவல்பூந்துறை நால்ரோட்டில் சாலை ஆக்கிரமிப்புகளைக் கண்டறிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், மொடக்குறிச்சி தாலூகா நில அளவையர் (சர்வேயர்) ஆகியோர் அளவீடு செய்யும் ஆய்வில் ஈடுபட்டனர். 
இந்த ஆய்வில் அப்பகுதியில் செயல்பட்டு வரும் பேக்கரி, அதன் பின்புறம் உள்ள கடைகள் பெரும்பாலான இடங்களை ஆக்கிரமித்து கட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அதிகாரிகள் ஆக்கிரமிப்புகள் குறித்து அளவீடு செய்யப்பட்டு குறியீடு செய்யப்பட்டது. 
இதுகுறித்து, அவல்பூந்துறை பேரூராட்சி செயல் அலுவலர் கே.சி.ராஜேந்திரன், மொடக்குறிச்சி வட்டாட்சியர் ஜெயகுமார் ஆகியோர் கூறியதாவது
 அவல்பூந்துறை நால்ரோட்டில் பெரும்பாலன சாலைகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனைக் கணக்கிட திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டன. ஆக்கிரமிப்பில் உள்ள கட்டடங்கள் விரைவில் அப்புறப்படுத்தப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.