கூட்டுறவு சங்கத் தேர்தல்: தேர்தல் அதிகாரியிடம் அதிமுகவினர் வாக்குவாதம்

மொடக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தேர்தலில் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு விண்ணப்பப் படிவம்
Updated on
1 min read

மொடக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தேர்தலில் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு விண்ணப்பப் படிவம் வழங்கும்போது ஒளிப்பதிவு செய்யக் கூடாது என  அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
 மொடக்குறிச்சி தொகுதியில் பெரும்பாலான தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்நிலையில், மொடக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தேர்தல் வேட்புமனு விண்ணப்பங்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
 திங்கள்கிழமை காலை 9 மணி முதல் வேட்பு மனுக்கள் பெற உறுப்பினர்கள் ஆர்வத்துடன் குவியத் தொடங்கினர். காலை 10 மணிக்கு தேர்தல் அலுவலர் கே.எம். நல்லசாமி விண்ணப்பம் வழங்க சங்கத்துக்கு 
வந்தார். அப்போது, விண்ணப்பங்களைப் பெறுபவர்களை விடியோ கேமரா மூலம் ஒளிப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, அங்கு வந்த மொடக்குறிச்சி அதிமுக பேரூர் கழகச் செயலாளர் ரவி, அவருடன் வந்தவர்கள் விடியோ ஒளிப்பதிவு செய்ய அனுமதி 
கடிதம் உள்ளதா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு தேர்தல் அதிகாரி நல்லசாமி உயர் அதிகாரிகள் ஒளிப்பதிவு 
செய்யுமாறு கூறியுள்ளனர் எனக் கூறியுள்ளார். அதற்கு அதிமுகவினர் அனுமதி கடிதம் இல்லாமல் விடியோ ஒளிப்பதிவு செய்யக் கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
 அப்போது, மொடக்குறிச்சி காவல் துறை ஆய்வாளர் சேகர், போலீஸார் அவர்களை சமரசம் செய்து அனுமதி கடிதம் இல்லாததால் விடியோ ஒளிப்பதிவு செய்ய வேண்டாம் எனக் கூறி விடியோ சாதனங்களை அப்புறப்படுத்தினர். அதைத்  தொடர்ந்து, விண்ணப்பப் படிவங்கள் விநியோகம் தொடங்கியது. உறுப்பினர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பத்தை வாங்கிச் சென்றனர். 
 இன்றே வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய உள்ளதாலும், திமுகவில் இரு அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுவதாலும் மொடக்குறிச்சியில் பரபரப்பு நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com