மழை, வெள்ள காலங்களில் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதால் நன்கு காய்ச்சி வடிகட்டிய குடிநீரையே பொதுமக்கள் பருக வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் வெளியிட்ட அறிக்கை:
மழை, வெள்ள காலங்களில் மேல்நிலை குடிநீர்த் தொட்டிகளிலோ, தரைமட்ட குடிநீர்த் தொட்டிகளிலோ அல்லது குடிநீர் குழாய்களிலோ மழை வெள்ளம் புகுந்திருந்தால் தொட்டிகளை பிளீச்சிங் பவுடரால் சுத்தம் செய்ய வேண்டும். குடிநீர் திறந்தவுடன் முதல் 5 நிமிடங்களில் தெருக்குழாய் வழியாகவோ, வீட்டுக் குழாய் வழியாகவோ வரும் குடிநீரைப் பருகக் கூடாது. மேலும், குடிநீரை பொதுமக்கள் நன்கு காய்ச்சி வடிகட்டிய பிறகே பருக வேண்டும்.
சுகாதார அலுவலர்கள் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் போது, தகுந்த அளவு குளோரின் கலந்திருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வதோடு, கிணறு, டேங்கர் வாகனங்கள் மூலமாக விநியோகிக்கப்படும் தண்ணீரிலும் குளோரின் கலந்து அலுவலர்கள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடங்களிலும், மழை நீர் புகுந்த பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. நீரினால் பரவும் வயிற்றுப்போக்கு போன்ற தொற்றுநோய்கள் ஏற்படாத வகையில் சுகாதார அலுவலர்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகள் போதுமான அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அவசர கால ஊர்திகள், மருத்துவ வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. குடிநீரை காய்ச்சிக் குடிக்கவும், சுகாதாரம் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
வெள்ள நிவாரண முகாம்களின் மூலம் குளோரின் கலந்த நீர், சுகாதாரமான உணவு, கழிப்பிட வசதி, பிளீச்சிங் பவுடர் 1 பங்கு சுண்ணாம்பு 4 பங்கு என்ற விகிதத்தில் கலந்து கிருமி நீக்கப் பணிகள் ஆகியன உடனடியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் காய்ச்சல், தொற்று கிருமிகள் ஏற்படாத வகையில் மருத்துவக் குழுக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
எனவே, வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து தொற்று நோய்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறந்த வசனத்துக்கான தேசிய விருதை வென்றார் லக்கி பாஸ்கர் பட இயக்குநர்!

72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு! யார் யாருக்கு என்னென்ன விருதுகள்?

சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதை வென்றார் ரந்தீப் ஹூடா!

இன்றைய செய்திகள் ஜூலை 18 - நேரலை
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan


