பெருந்துறை, காங்கயம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 286 ஏழைப் பெண்களுக்கு, ரூ. 61.78 மதிப்பிலான தாலிக்குத் தங்கம் மற்றும் ரூ.1.24 கோடியில் திருமண நிதியுதவி வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார். திருப்பூர் மக்களவை உறுப்பினர் வி.சத்யபாமா முன்னிலை வகித்தார்.
விழாவில், பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் பங்கேற்று, பெருந்துறை, காங்கயம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த, 286 ஏழைப்பெண்களுக்கு, ரூ.61,78,172 மதிப்பிலான தாலிக்குத் தங்கம் மற்றும் ரூ.1.24 கோடியில் திருமண நிதியுதவிகளை வழங்கி பேசினார். மேலும், பெருந்துறை அண்ணா சிலை மற்றும் காவல் நிலையம் அருகில் அமைக்கப்பட்ட ரவுண்டானாவை திறந்துவைத்தார்.
விழாவில், சட்டப் பேரவை உறுப்பினர்கள் வி.பி.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி), உ.தனியரசு (காங்கயம்), சக்தி மசாலா நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் துரைசாமி, சாந்தி துரைசாமி, சாகர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ராமசாமி, தாளாளர் சௌந்திரராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.