வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

ஜம்பையில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகத்தில் மனு

பவானியை அடுத்த ஜம்பையில் புதிதாக மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். 

Updated On :24 ஜூலை 2018, 12:42 am IST

பவானியை அடுத்த ஜம்பையில் புதிதாக மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். 
ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா தலைமை வகித்தார்.     
 இதில் ஜம்பை பகுதியைச் சேர்ந்த மக்கள் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: பவானி வட்டம், ஜம்பை பேரூராட்சிப் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 
இங்கு, நடுநிலைப்பள்ளி, கைத்தறி கூட்டுறவு சங்கம், கோயில், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் மதுக்கடை அமைத்தால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர் பெரிதும் பாதிக்கப்படுவர். 
எனவே, புதிதாக டாஸ்மாக் மதுக்கடை அமைக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதில், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 214 மனுக்கள் பெறப்பட்டு, துறைரீதியான நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டது. 
இக்கூட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் ஆர்.பி.பிரபாவதி, அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.