மொடக்குறிச்சியை அடுத்த குட்டக்காட்டுவலசு பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 3 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களைத் திருடிச் சென்றனர்.
மொடக்குறிச்சியை அடுத்த குட்டக்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவர் தனது குடும்பத்துடன் ஈரோட்டில் வசித்து வருகிறார். அவ்வப்போது வீட்டுக்கு வந்து செல்வார்.
இந்நிலையில், இவரது வீட்டின் கதவு திங்கள்கிழமை காலை திறந்து கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் பரமசிவத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர் வந்து பார்த்தபோது, வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த ரூ. 3 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள், டிவிடி பிளேயர் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும் அடுத்தடுத்த இரு வீடுகளிலும் திருட முயற்சி செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து மொடக்குறிச்சி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வாடகைக்கு விடப்பட்ட பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள்!

மத்திய பிரதேச கல்வி சமூக அலுவலகத்தில் சோதனை: நகை, ரொக்கம் பறிமுதல்!

வீழ்ச்சியடையும் தேங்காய் விலை! அரசு என்ன செய்யப் போகிறது?

விஜய் பிறந்தநாள் புகைப்படம்! த்ரிஷா பதிவால் புகழடைந்த கேக் வகைகள்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


