ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

சோலார் அருகே ரூ. 60 கோடியில் புறநகர் பேருந்து நிலையம்  விரைவில் அமைக்கப்படும்

மொடக்குறிச்சி தொகுதி, லக்காபுரம் ஊராட்சி சோலார் பகுதியில் ரூ. 60 கோடி ரூபாய் மதிப்பில் தனியார் பங்களிப்புடன் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On :29 ஜூன் 2018, 12:58 am IST

மொடக்குறிச்சி தொகுதி, லக்காபுரம் ஊராட்சி சோலார் பகுதியில் ரூ. 60 கோடி ரூபாய் மதிப்பில் தனியார் பங்களிப்புடன் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி தெரிவித்ததாவது: 
ஈரோடு நகரம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஈரோடு நகரின் வெளிவட்டத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைந்தால் நகரின் போக்குவரத்து இடையூறு நீங்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். இதுகுறித்து சட்டப் பேரவை கூட்டத் தொடரில் நான் கோரிக்கை வைத்தேன்.
இதற்கு பதிலளித்து பேசிய  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் வேலுமணி,  ஈரோடு மாநருக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளதால் நெரிசலைத் தவிர்க்க சோலார் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, இத்திட்டத்தின் இறுதி அறிக்கை பெறப்பட்டவுடன் தனியார் பங்களிப்புடன் சுமார் ரூ. 60 கோடி மதிப்பில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு மொடக்குறிச்சி தொகுதி மக்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.