திமுக ஆலோசனைக் கூட்டம்

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் ஆலோசனைக் கூட்டம், கவுந்தப்பாடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
Updated on
1 min read

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் ஆலோசனைக் கூட்டம், கவுந்தப்பாடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இக்கூட்டத்துக்கு, ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாடும் வகையில் மார்ச் மாதம் முழுவதும் நகரம், ஒன்றியம் பேரூர் கழகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். மண்டல மாநாட்டில் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும். பொறியாளர் அணியை வலுப்படுத்த அதிக அளவில் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். மணல் திருட்டைத் தடுத்து, மணல் குவாரி அமைத்து தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com