ரூ. 11.52 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்
பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளை பொருள்கள் ரூ. 11.52 லட்சத்துக்கு செவ்வாய்க்கிழமை ஏலம் போயின.


பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளை பொருள்கள் ரூ. 11.52 லட்சத்துக்கு செவ்வாய்க்கிழமை ஏலம் போயின.
இங்கு, 3,505 தேங்காய்கள் கொண்டு வரப்பட்டன. சிறியவை ரூ. 9.70-க்கும், பெரியவை ரூ. 20.30-க்கும் என மொத்தம் ரூ. 86,250-க்கு விற்பனையானது. 26 மூட்டைகள் தேங்காய் பருப்பு 3.25 குவிண்டால் கிலோ ரூ. 95.19 முதல் ரூ. 130.59 வரை மொத்தம் ரூ. 32,366-க்கும், 679 மூட்டைகள் நிலக்கடலைக்காய் 335.03 குவிண்டால் கிலோ ரூ. 38.46 முதல் ரூ. 46 வரையில் மொத்தம் ரூ. 8,73,795-க்கும் ஏலம் போனது.
56 மூட்டைகள் நெல் 40.94 குவிண்டால் கிலோ ரூ. 10.92 முதல் ரூ. 16 வரையில் மொத்தம் ரூ. 53,394-க்கும், 31 மூட்டைகள் மக்காச்சோளம் 29.51 குவிண்டால் கிலோ ரூ. 12.27 முதல் ரூ. 12.42 வரையில் மொத்தம் ரூ. 36,518-க்கும், 25 மூட்டைகள் துவரை 18.03 குவிண்டால் கிலோ ரூ. 33.49 முதல் ரூ. 36.49 வரையில் மொத்தம் ரூ. 60,328-க்கும், 2 மூட்டைகள் எள் 1.09 குவிண்டால் கிலோ ரூ. 91.90 என மொத்தம் ரூ. 10,062-க்கும் விற்பனையானது.
மொத்தம் 819 மூட்டைகள் 460.37 குவிண்டால் விளைபொருள்கள் மொத்தம் ரூ. 11 லட்சத்து 52 ஆயிரத்து 713-க்கு ஏலம் போனது. இதில், பூதப்பாடி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 216 விவசாயிகள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...