ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் வியாழக்கிழமை தொடங்கியது.
ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் நர்மதாதேவி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 34 உள் வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமங்களின் கணக்குகள் ஜுன் 5ஆம் தேதி வரை ஆய்வு செய்யப்பட உள்ளன. கிராம நிர்வாக அலுவலர்களால் பராமரிக்கப்படும் 24 வகையான கிராம கணக்குகள் சரியாக உள்ளனவா என்பதும் ஆய்வு செய்யப்படும். மேலும் பல்வேறு
பதிவேடுடுகள் ஆய்வு செய்யப்படவுள்ளன.
பெருந்துறையில்... : பெருந்துறை வட்டத்தில் வருவாய்த் தீர்வாயம் வியாழக்கிழமை (மே 24) தொடங்கியது.
இந்த வருவாய்த் தீர்வாயம் வியாழக்கிழமை (மே 24) முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஈரோடு, உதவி ஆணையர் (கலால்) சி.ஜெயராமன் தலைமையில், பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
முதல் நாளான வியாழக்கிழமை, பெருந்துறை உள்வட்டத்தைச் சேர்ந்த சீனாபுரம், தலையம்பாளையம், நிமிட்டிபாளையம், சுள்ளிபாளையம், பட்டக்காரன்பாளையம், குள்ளம்பாளையம், ஆயிக்கவுண்டன்பாளையம், பெருந்துறை, விஜயபுரி, அக்ரஹார விஜயமங்கலம், மாரப்பநாயக்கன்பாளையம், மூங்கில்பாளையம், பொன்முடி, கம்புளியம்பட்டி, சின்னவீரசங்கிலி, பெரியவீரசங்கிலி, கராண்டிபாளையம், மேட்டுப்புதூர், பாலக்கரை, சின்னமல்லன்பாளையம், துடுப்பதி, கருமாண்டிசெல்லிபாளையம் ஆகிய கிராமங்களுக்கான வருவாய்த் தீர்வாயம் நடைபெற்றது.
இதில், 88 மனுக்கள் பெறப்பட்டன. பயனாளிகளுக்கு உதவித் தொகைகளுக்கான ஆணையை ஈரோடு, உதவி ஆணையர் (கலால்) சி.ஜெயராமன் வழங்கினார்.
இதில் பெருந்துறை வட்டாட்சியர் வே. வீரலட்சுமி, துணை வட்டாட்சியர் ஜி.முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சத்தியமங்கலத்தில்...: சத்தியமங்கலத்தில் வியாழக்கிழமை துவங்கிய வருவாய்த் தீர்வாயத்தில் 50 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.
சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் புகழேந்தி தலைமையில் வருவாய்த் தீர்வாயம் வியாழக்கிழமை துவங்கியது. வட்டாட்சியர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். நிலஉரிமை வட்டாட்சியர் கார்த்திக் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
புதுப்பீர்கடவு சிக்கரசம்பாளையம், மலையடிப்புதூர், ஆலத்துக்கோம்பை, சத்தியமங்கலம், இக்கரை நெகமம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களிடமிருந்து பட்டா மாறுதல், நிலஒப்படை, வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கேட்டு 100க்கு மேற்பட்டோரிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. அதில் 50 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது. மே 25ஆம் தேதி பவானிசாகர் உள்வட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை மனு அளிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









