‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

ஈரோடு கறவை மாட்டுச் சந்தை: ரூ. 3.5 கோடிக்கு விற்பனை

ஈரோட்டில் வியாழக்கிழமை கூடிய மாட்டுச் சந்தையில் பசு, எருமை கறவை மாடுகள், வளர்ப்புக் கன்றுக் குட்டிகள் ஆகியவை ரூ. 3.5 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளன.

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

ஈரோட்டில் வியாழக்கிழமை கூடிய மாட்டுச் சந்தையில் பசு, எருமை கறவை மாடுகள், வளர்ப்புக் கன்றுக் குட்டிகள் ஆகியவை ரூ. 3.5 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளன.
ஈரோடு, கருங்கல்பாளையத்தில் காவிரிக்கரை சோதனைச்சாவடி அருகே வாரந்தோறும் புதன், வியாழன் ஆகிய இரு நாள்களில் மாட்டுச் சந்தை நடைபெறுகிறது. 
அதில், புதன்கிழமை வளர்ப்பு மாடுகளும், வியாழக்கிழமை கறவைப் பசு மாடுகளும், எருமை மாடுகள், வளர்ப்புக் கன்றுக்குட்டிகளும் விற்பனை செய்யப்படுகின்றன. வியாழக்கிழமை நடைபெற்ற சந்தையில், அனைத்து மாநில வியாபாரிகள், விவசாயிகள், மாடுகள் வரத்தும் சென்ற வாரத்தைவிட அதிகரித்தே காணப்பட்டது.
இதுகுறித்து, மாட்டுச் சந்தை மேலாளர் ஆர்.முருகன் கூறியதாவது:
மழை குறைந்ததன் காரணமாக கேரளம், கர்நாடக மாநில வியாபாரிகள் உள்பட அனைத்துப் பகுதி வியாபாரிகள், விவசாயிகள் வழக்கம்போல சந்தைக்கு வந்திருந்தனர். மகாராஷ்டிர வியாபாரிகள் வரவில்லை. இந்த வாரச் சந்தையில் 400 பசு மாடுகள், 300 எருமைகள், 200 வளர்ப்புக் கன்றுகள் விற்பனை செய்யப்பட்டன. 
இதில், பசு மாடு ரூ. 16 ஆயிரம் முதல் ரூ. 36 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ. 18 ஆயிரம் முதல் ரூ. 38 ஆயிரம் வரையிலும், வளர்ப்புக் கன்றுகள் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 12 ஆயிரம் வரையிலும் விற்பனை ஆகியுள்ளன. 
மொத்தம் சுமார் ரூ. 3.5 கோடிக்கு வணிகம் நடைபெற்றுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.