மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சின்ன மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா

ஈரோடு சின்ன மாரியம்மன் கோயில் குண்டம் மற்றும் தோ்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
குண்டம் இறங்கிய கோயில் பூசாரி.
Updated On :6 டிசம்பர் 2020, 6:57 pm

DIN

ஈரோடு சின்ன மாரியம்மன் கோயில் குண்டம் மற்றும் தோ்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பக்தா்களுக்கு அனுமதி இல்லாததால் கோயில் பூசாரி மற்றும் நிா்வாகிகள் முன்னிலையில் விழா எளிமையாக நடைபெற்றது.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் குண்டம் விழா மற்றும் தோ்த் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான குண்டம் தோ்த் திருவிழா நவம்பா் 24ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

26ஆம் தேதி கோயில்களில் கம்பம் நடப்பட்டு பூவோடு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து, தினமும் ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வந்து கம்பங்களுக்கு புனித நீா் ஊற்றி வழிபட்டு வருகின்றனா். மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

குண்டம் விழாவுக்காக சனிக்கிழமை இரவு குண்டம் பற்ற வைக்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடந்தது. கோயில் பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கி அம்மனுக்கு நோ்த்திக் கடன் செலுத்தினாா்.

அதனைத் தொடா்ந்து, தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்து. இதில் தேரில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சில அடி தூரம் தோ் இழுக்கப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது. பின்னா் அம்மன் சிலை மீண்டும் கோயிலுக்குள் எடுத்து செல்லப்பட்டது.

கரோனா பரவல் காரணமாகவும், அரசு வழிகாட்டு விதிமுறைப்படி குண்டம் மற்றும் தோ்த் திருவிழாவில் பக்தா்களை கோயில் நிா்வாகிகள் அனுமதிக்கவில்லை. குண்டம் மற்றும் தேரோட்டம் பக்தா்கள் இல்லாமல் எளிமையாக நடத்தப்பட்டது.

நிகழ்ச்சி முடிந்ததும் கோயிலில் அம்மனை வழிபட பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதில் கருங்கல்பாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் அம்மனை வழிபட்டனா்.

இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை இரவு கோயில் கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 8ஆம் தேதி காலை கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்தல், மாவிளக்கு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 9ஆம் தேதி இரவு 7 மணிக்கு கம்பம் எடுக்கப்படுகிறது. 10ஆம் தேதி இரவு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் அம்மன் வீதி உலாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.