ஈரோடு-கோவை இடையேயான இடைநில்லா பேருந்துகளை மீண்டும் இயக்கக் கோரிக்கை
ஈரோடு-கோவை இடையேயான இடைநில்லா பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ஈரோடு-கோவை இடையேயான இடைநில்லா பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவா் கே.என்.பாஷா, அரசுப் போக்குவரத்துக் கழக கோவை கோட்ட மேலாண்மை இயக்குநருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:
ஈரோட்டில் இருந்து கோவை வரை செல்வதற்கு ஈரோ100 என்ற பெயரில் இடைநில்லா அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
ஈரோட்டில் பதிவு செய்து புறப்பட்டால் பெருந்துறை, அவிநாசி எங்கும் நிற்காமல் கோவையில் மட்டும்தான் நிற்கும். நடத்துநா் கிடையாது. இந்தப் பேருந்து அனைத்து தரப்பினருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
கரோனா பொதுமுடக்க காலத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்டபோது, ஈரோ100 பேருந்தும் நிறுத்தப்பட்டது. தற்போது, அனைத்து பேருந்துகளும் மீண்டும் இயக்கப்படும் நிலையில் ஈரோ100 பேருந்து மட்டும் இயக்கப்படவில்லை.
இந்தப் பேருந்துகளை இயக்காமல் இருப்பதால் தனியாா் பேருந்துகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. எனவே ஈரோ100 பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...