மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பவானிசாகர் மீன்வளர்ச்சி கழக விற்பனை நிலையத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து

பவானிசாகர் மீன்வளர்ச்சி கழக விற்பனை நிலையத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது.

News image
பவானிசாகர் மீன்வளர்ச்சி கழகம்.
Updated On :7 டிசம்பர் 2020, 3:42 am

DIN

பவானிசாகர் மீன்வளர்ச்சி கழக விற்பனை நிலையத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது.

சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகரில் தமிழக அரசின் மீன் வளர்ச்சி கழக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பவானிசாகர் அணையில் பிடிக்கும் மீன்கள்  இங்குள்ள பதப்படுத்தும் அறையில் விற்பனைக்காக  இருப்பு வைப்பது வழக்கம்.

மீனவர்கள் மீன்வலை, மீன் பதப்படுத்தும் தெர்மாகோல் அட்டைகள், அலுவல பயன்பாட்டு பொருள்கள், குளிரூட்டுவதற்து தேவையான 12 கேஸ் சிலிண்டர்கள் போன்ற பொருகள் இங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அலுவல ஊழியர்கள் இல்லாத நிலையில் மாலை மின்விளக்கு போடுவதற்காக மின்சார சுவிட்சை அழுத்தியபோது மின்கசிவு ஏற்பட்டு தெர்மாகோல் அட்டையில் தீப்பிடித்தது. அதனைத் தொடர்ந்து மீன்வலையில் பற்றி எரியத்துவங்கியது. 

இந்த தீ அங்குள்ள காலி கேஸ் சிலிண்டலில் பரவியது. பயங்கர சப்தத்துடன் வெடித்தது.

தீப்பிழம்பாக மேலே எழும்பியதால் பார்த்து பவானிசாகர் அணை பகுதி மக்கள் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வீரர்கள் தண்ணீர் பாய்ச்சி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ மேலும் பரவாமல் இருக்க தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் 12 காலி சிலிண்டர், மீன் வலை என சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.