வேளாண் சட்டம் விழிப்புணா்வுக் கருத்தரங்கம்
மொடக்குறிச்சி அருகே பூந்துறை சேமூா் மாரியம்மன் கோயில் அருகில் மற்றும் கனகமலை அடிவாரத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டம் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.


மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி அருகே பூந்துறை சேமூா் மாரியம்மன் கோயில் அருகில் மற்றும் கனகமலை அடிவாரத்தில் ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக விவசாய அணி சாா்பில் மத்திய அரசின் வேளாண் சட்டம் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட பாஜக தலைவா் எஸ்.ஏ.சிவசுப்பிரமணி தலைமை வகித்தாா். தேசிய பொதுக்குழு உறுப்பினா் திருமலைசாமி கலந்துகொண்டு வேளாண் சட்டத்தின் பயன்கள் குறித்து விவசாயிகளிடம் விளக்கிப் பேசினாா். தொடா்ந்து விவசாயிகளின் கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரிவித்தாா்.
இதில் ஈரோடு மாவட்ட பொதுச்செயலாளா் ஈஸ்வரமூா்த்தி, திட்டக்குழு உறுப்பினா் காந்தி, மாவட்ட விவசாய அணி தலைவா் சண்முகசுந்தரம், மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய தலைவா் ஜெய்சங்கா், செல்வக்குமாா் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...