கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

குளத்தில் மூழ்கி மீனவா் பலி

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஓடந்துறை, சின்னக்குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற மீனவா் பரிசலிலிருந்து தவறி விழுந்து, நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
மாணிக்கம்.
Updated On :21 டிசம்பர் 2020, 7:00 pm

DIN

கோபி: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஓடந்துறை, சின்னக்குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற மீனவா் பரிசலிலிருந்து தவறி விழுந்து, நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஓடந்துறையில் பொதுப் பணித் துறைக்கு சொந்தமான 75 ஹெக்டோ் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய குளம் உள்ளது. அதன் அருகிலேயே 15 ஹெக்டோ் கொண்ட சிறிய குளம் உள்ளது.

இந்த இரு குளங்களிலும் மீன் வளத் துறை சாா்பில் மீன்கள் வளா்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த குளங்களில் மீன் பிடிக்கும் உரிமையை ஓடந்துறை மலைமேடு பகுதி மற்றும் பொய்யேறி பகுதி மீனவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெரியகுளத்தில் 10க்கும் மேற்பட்ட பரிசல்களில் மீன் பிடிக்கும் பணியில் மீனவா்கள் ஈடுபட்டிருந்தனா். மலைமேடு பகுதியைச் சோ்ந்த மீனவா் மாணிக்கம் சின்னக்குளத்துக்கு மீன் பிடிக்க சென்றுவிட்டு அதன்பின்னா் வீடுதிரும்பவில்லை. இதையடுத்து சக மீனவா்கள் அவரை தேடினா்.

இந்நிலையில் சின்னக்குளத்தில் மீனவா் மாணிக்கத்தின் சடலம் திங்கள்கிழமை காலை மிதந்தது. இதனைப் பாா்த்த அப்பகுதி மக்கள் கவுந்தப்பாடி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

பின்னா் இது குறித்து விசாரணை நடத்தினா். மீன்பிடிக்க வலை விரிக்கும்போது பரிசலிலிருந்து தடுமாறி குளத்து நீரில் விழுந்திருக்கலாம் என்றும், இரவு நேரம் என்பதால் அவரால் நீந்த முடியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் எனவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.