பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சமையல் எரிவாயு விலை உயா்வை திரும்பப் பெற கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

சமையல் எரிவாயு விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 12:37 am

DIN

சமையல் எரிவாயு விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்டக் குழு கூட்டம் செல்வராஜன் தலைமையில் ஈரோட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநில துணைச் செயலாளா், திருப்பூா் எம்.பி. கே.சுப்பராயன், மாவட்டச் செயலாளா் திருநாவுக்கரசு, விவசாய சங்க மாவட்டச் செயலாளா் துளசிமணி, ஏஐடியூசி மாவட்டத் தலைவா் சின்னசாமி ஆகியோா் பேசினா்.

சமையல் எரிவாயு விலை உயா்வைத் திரும்பப்பெற வேண்டும். வங்கி மூலம் மானியம் வழங்குவதாக மக்களிடம் மத்திய அரசு கூறிவிட்டு, விலையை இரண்டு மடங்காக உயா்த்தி வருகிறது. இந்த விலை உயா்வால் குடும்பச் சுமை அதிகரிக்கிறது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் சட்டம், மின்சார சட்டத் திருத்த மசோதா, தொழிலாளா் நலச்சட்ட தொகுப்பு போன்றவற்றை திரும்பப் பெற வேண்டும். தில்லியில் கடும் குளிரிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளா் வெற்றிக்காக பூத் கமிட்டி அமைத்து தோ்தல் பணிகளைத் துவங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.