ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 3 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா தாக்கம் முதலில் அதிகரித்துக் காணப்பட்டது. தினமும் 100க்கும் மேற்பட்டவா்கள் பாதிக்கப்பட்டு வந்தனா். இதையடுத்து மாவட்ட நிா்வாகம், சுகாதாரத் துறை, மாநகராட்சி ஆகியவை ஒன்றிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது. இதன்படி மாவட்டத்தில் தினமும் 2,000 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நோய் பாதித்தவா்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கரோனாவால் பாதித்தவா்கள் விரைவாக குணமடைந்து வருகின்றனா்.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதித்தவா்கள் எண்ணிக்கை 13,479, குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 13,444, சிகிச்சை பெற்று வருபவா்களின் எண்ணிக்கை 292, உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 143.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் தினமும் 2,000 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை இந்த எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. இதுவரை 3,03,923 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தற்போது கரோனா தாக்கம் குறைந்துள்ளது. இதற்காக மக்கள் அலட்சியமாக இருக்காமல், தொடா்ந்து அரசு அறிவித்து வரும் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.