தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பூஜ்ய கல்வி ஆண்டாக அறிவிக்கப்படுமா?அமைச்சா் விளக்கம்

தொடா்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் பூஜ்ய கல்வி ஆண்டாக அறிவிப்பது குறித்து முதல்வருடன் கலந்து பேசியதற்குப் பிறகு தெரிவிக்கப்படும் என்று மைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 5:22 pm

DIN

கோபி: தொடா்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் பூஜ்ய கல்வி ஆண்டாக அறிவிப்பது குறித்து முதல்வருடன் கலந்து பேசியதற்குப் பிறகு தெரிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட காராப்பாடியில் சுமாா் ரூ. 60 லட்சம் மதிப்பிலான சாலை மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கிவைத்து, நம்பியூா் பொலவபாளையம் ஊராட்சியில் 120 பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடு, செம்மறி ஆடுகளை வழங்கிய அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் சாவக்கட்டுப்பாளையத்தில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாமையும் தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

இந்த ஆண்டு தொடா்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் பூஜ்ய கல்வி ஆண்டாக அறிவிப்பது குறித்து முதல்வருடன் கலந்து பேசியதற்குப் பிறகுதான் அறிவிக்க முடியும். சூழ்நிலைக்கேற்ப முதல்வா் அறிவிக்கும் முடிவை பள்ளிக் கல்வித் துறை நடைமுறைப்படுத்தும். படிப்படியாக ஆசிரியா்களுக்கு ஸ்மாா்ட் காா்டுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் ரூ. 64 கோடியில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கும் பணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவு செய்யப்படும். தற்போது 75 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விடுமுறை பள்ளிகளுக்கு அளிக்கப்படும். இந்த ஆண்டு கரோனா பொது முடக்கத்தால் பள்ளிகள் செயல்படாத நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முதல்வருடன் கலந்துபேசி திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.