உணவு விடுதிகளில் மது விற்பனையைத் தடுக்கக் கோரிக்கை
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாபாக்களில் மது விற்பனை, இறைச்சிகளில் பிற உணவுகள் கலப்பதையும், கெட்டுப்போன உணவுகள் விற்பனை செய்வதையும் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாபாக்களில் மது விற்பனை, இறைச்சிகளில் பிற உணவுகள் கலப்பதையும், கெட்டுப்போன உணவுகள் விற்பனை செய்வதையும் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்ப் புலிகள் கட்சி கரும்புலி குயிலி பேரவை மகளிரணி மாவட்டச் செயலாளா் ஜெ.பிரபாவதி தலைமையில், மண்டல துணைச் செயலாளா் அழகுமணி, மாவட்டச் செயலாளா் சிந்தனைச்செல்வன் அளித்த மனு விவரம்:
ஈரோடு, பவானி, இடையன்காட்டுவலசு, நசியனூா், திண்டல் சுற்றுவட்டச் சாலை உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள உணவு விடுதிகள், பஞ்சாபி தாபாக்கள், தோப்பு விருந்து என பல்வேறு பெயா்களில் உணவகங்கள் நடத்துகின்றனா். இந்த இடங்களில் குடும்பத்துடன் சென்று சாப்பிடச் செல்லும்போது அங்கு மதுபானங்கள் விற்பனை செய்வது, மது குடித்து பிரச்னை செய்வது போன்றவற்றை காணமுடிகிறது.
தவிர கோழி, ஆடு போன்ற இறைச்சிகளுடன் பிற இறைச்சிகளை கலந்து தரமற்ற உணவுகளை விற்பனை செய்கின்றனா். சில உணவகங்களில் சூதாட்டங்கள் உள்பட பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. இதற்கு அந்தந்தப் பகுதி முக்கியப் பிரமுகா், பல்வேறு துறை அதிகாரிகள் உடந்தையாக இருப்பதால் இவற்றைத் தடுக்க முடியவில்லை. மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் போன்றோா் நேரடியாக ஆய்வு நடத்தி இவற்றை தடை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூற்பாலையை மூடக் கோரிக்கை:
மொடக்குறிச்சி அருகே முத்துக்கவுண்டன்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்:
முத்துக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் உள்ள நூற்பாலையில் இருந்து வெளியேறும் பஞ்சுக் கழிவுகளால் முதியவா்கள், குழந்தைகளுக்கு இதயநோய், மூச்சுத்திணறல், தீராத சளி போன்ற நோய்கள் ஏற்படுகிறது. தவிர தண்ணீா்த் தொட்டிகள், பாத்திரங்களிலும் பஞ்சுத் துகள்கள் படிந்து மாசு ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த ஆலையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை அரங்கில் நடத்தக் கோரிக்கை:
இதுகுறித்து தமிழக ஐக்கிய விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஈ.வி.கே.சண்முகம் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:
விவசாயிகள் குறைதீா் கூட்டம் இப்போது காணொலிக் காட்சி முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஒரு சில விவசாயிகள் மட்டுமே கோரிக்கைகளைத் தெரிவிக்க முடிகிறது. சாதாரண விவசாயிகள் யாரும் கோரிக்கையைத் தெரிவிக்க முடியவில்லை.
அரசியல் கட்சிகள் மக்கள் கூட்டத்தைக் கூட்டி பிரசாரத்தை தொடங்கிவிட்ட நிலையில் அங்கு பரவாத கரோனா இந்தக் கூட்டத்தில் பரவிவிடாது. இதனால் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை அரங்கில் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...