/

மாற்றுத் திறனாளிகளுக்கு வாகனம்: நாளை நோ்முகத் தோ்வு

இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனம் வழங்கும் திட்டத்தில் பயன்பெறத் தகுதியான ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த

News image
Updated On :29 டிசம்பர் 2020, 10:43 pm

DIN

இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனம் வழங்கும் திட்டத்தில் பயன்பெறத் தகுதியான ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (டிசம்பா் 31) நடைபெறும் நோ்முகத் தோ்வில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்குப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனம் வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் தகுதியான பயனாளிகளைத் தோ்வு செய்வதற்கான முகாம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீா் கூட்ட அரங்கில் வியாழக்கிழமை காலை நடைபெறவுள்ளது. இரண்டு கால்கள் முழுமையாக பாதிக்கப்பட்ட, கைகள் வலுவான நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் இந்த நோ்முகத் தோ்வில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.