கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பாலியல் வன்கொடுமை வழக்கு: மெக்கானிக்குக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மெக்கானிக்குக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :26 பிப்ரவரி 2020, 12:08 pm

DIN


ஈரோடு: திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மெக்கானிக்குக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு, மாணிக்கம்பாளையம் நேதாஜி நகரைச் சேர்ந்த மெக்கானிக் கார்த்தி (31). இவருக்கு திருமணமாகி விட்டது. இந்நிலையில் 17 வயது சிறுமியுடன் கார்த்திக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி அந்தச் சிறுமியை கடந்த 15.01.2016-இல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பெயரில் ஈரோடு மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கார்த்தியைக் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்து வந்த ஈரோடு மகளிர் நீதிமன்ற நீதிபதி மாலதி இன்று தீர்ப்பளித்தார். அதில் மெக்கானிக் கார்த்திக்குக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ 25,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.1.25 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.