ஈரோட்டில் கனி மார்க்கெட், ஜவுளிச் சந்தை இன்று செயல்படவில்லை
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு கனி மார்க்கெட், ஜவுளிச் சந்தை இன்று செயல்படவில்லை


கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு கனி மார்க்கெட், ஜவுளிச் சந்தை இன்று செயல்படவில்லை
ஈரோட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று நோய் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் வரும் 30-ஆம் தேதி வரை தினமும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே மளிகை கடை செயல்படும் என்று முடிவு செய்தனர்.
இதன்படி ஈரோடு பகுதியில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே மளிகைக் கடைகள் செயல்படுகின்றன. இதேபோல் ஈரோடு கனி மார்க்கெட் வியாபாரிகள் கரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிப்பது என்று முடிவு செய்தனர். இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் ஈரோடு கனி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று கனி மார்க்கெட், தினசரி ஜவுளி வியாபாரிகள் சார்பில் ஒருநாள் விடுமுறை அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி இன்று ஈரோடு கனி மார்க்கெட்டில் உள்ள 360 தினசரி கடைகளும் ரோட்டோரத்தில் போடப்பட்டிருக்கும் 46 கடைகள் என மொத்தம் 406 கடைகள் அடைக்கப்பட்டன.
ஜவுளி மார்கெட் முழுவதும் இன்று பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு கிருமினாசினியும் அடிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...