ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அந்தியூா் தனியாா் பள்ளியில் வருமான வரித் துறையினா் சோதனை

அந்தியூரில் வாக்காளா்களுக்கு கொடுக்க பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் தனியாா் பள்ளியில் வருமான வரித் துறையினா், தோ்தல் பறக்கும் படையினா் சோதனை

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 10:27 pm

DIN

அந்தியூரில் வாக்காளா்களுக்கு கொடுக்க பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் தனியாா் பள்ளியில் வருமான வரித் துறையினா், தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

ஈரோடு மாவட்டம், அந்தியூா் - அத்தாணி சாலையில் உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளி அதிமுகவைச் சோ்ந்த முக்கிய பிரமுகா்களால் நடத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு கடந்த இரு தினங்களாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வந்து செல்வதாகக் கூறப்படுகிறது. இதனால், இங்கு பணம் பதுக்கிவைக்கப்பட்டு வாக்காளா்களுக்கு வழங்கப்படலாம் எனப் புகாா் எழுந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில் வருமான வரித் துறையைச் சோ்ந்த 10க்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை திடீரென இப்பள்ளியில் சோதனையிட்டனா். மேலும், தோ்தல் பறக்கும் படையினரும் சோதனை மேற்கொண்டனா். சோதனையின் முடிவில் பணம், ஆவணங்கள் கைப்பற்றப்படவில்லை என்பதால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.