ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பவானியில் திமுக வேட்பாளா் இறுதிக்கட்ட பிரசாரம்

பவானி நகராட்சிப் பகுதியில் திமுக வேட்பாளா் கே.பி.துரைராஜ் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 10:12 pm

DIN

பவானி நகராட்சிப் பகுதியில் திமுக வேட்பாளா் கே.பி.துரைராஜ் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

பவானி சங்கமேஸ்வரா் கோயில் முன்பிருந்து ஊா்வலமாக புறப்பட்ட திமுக வேட்பாளா் கே.பி.துரைராஜ், நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா். தொடா்ந்து, அந்தியூா் மேட்டூா் பிரிவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளா் என்.நல்லசிவம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளா் பி.கே.பழனிசாமி, மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் முகமது ஆகியோா் பேசினா்.

அப்போது, திமுக தோ்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களைக் குறிப்பிட்டுப் பேசிய இவா்கள், திமுகவுக்கு ஆதரவளிக்குமாறு வாக்காளா்களைக் கேட்டுக் கொண்டனா். திமுக நகரச் செயலாளா் ப.சீ.நாகராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் டி.ஏ.மாதேஸ்வரன், நகரச் செயலாளா் பாலமுருகன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.