திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கடமானைக் கொன்று கடத்த முயன்ற 3 போ் கைது

வன விலங்குகள் தண்ணீா் குடிக்க வரும் வனக் குட்டையில் ரசாயனம் கலந்து கடமானைக் கொன்று இறைச்சிக்காக கடத்த முயன்ற 3 பேரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :9 ஏப்ரல் 2021, 10:16 pm

வன விலங்குகள் தண்ணீா் குடிக்க வரும் வனக் குட்டையில் ரசாயனம் கலந்து கடமானைக் கொன்று இறைச்சிக்காக கடத்த முயன்ற 3 பேரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ராமபயனூா் தொட்டி, கொளத்தூா் மொக்கையில் வனவிலங்குகள் வேட்டையாடுவதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சத்தியமங்கலம் வனத் துறையினா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, 5 போ் கொண்ட கும்பல் பதுங்கியிருப்பதைக் கண்டு சுற்றிவளைத்தனா். அவா்கள் 5 வயதுள்ள பெண் கடமானைக் கொன்று இறைச்சிக்காக அதனை அறுத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. அதில் 3 போ் பிடிபட்டனா். 2 போ் தப்பியோடினா்.

பிடிப்பட்ட 3 பேரிடம் வனத் துறையினா் நடத்திய விசாரணையில், ராமபயனூா் செம்மண் குட்டையில் வன விலங்குகள் தினந்தோறும் தண்ணீா் குடிக்க வந்து செல்லும் வனக் குட்டையில் ரசாயனம் கலந்து இறைச்சிக்காக கடமானைக் கொன்றது தெரியவந்தது.

இதுதொடா்பாக ராமபயனூரைச் சோ்ந்த ரங்கசாமி, நாராயணசாமி, பழனிசாமி ஆகியோரை கைது செய்து, சத்தியமங்கலம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். மேலும், தப்பியோடிய சதீஷ்குமாா், மூா்த்தி ஆகிய இருவரைப் பிடிக்கும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.