ஆன்லைனில் புடவைகள் வாங்கினால் லாபத்தில் பங்கு தருவதாக மோசடி
பவானி அருகே உள்ள ஜவுளிக் கடையில் ஆன்லைன் மூலம் புடவைகள் வாங்கினால்,லாபத்தில் பங்கு தருவதாக நடைபெற்ற மோசடி குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


பவானி அருகே உள்ள ஜவுளிக் கடையில் ஆன்லைன் மூலம் புடவைகள் வாங்கினால்,லாபத்தில் பங்கு தருவதாக நடைபெற்ற மோசடி குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பவானி, காளிங்கராயன்பாளையம், மணக்காட்டூரைச் சோ்ந்த பூங்கோதை தேவி ஜவுளிக் கடை நடத்தி வருகிறாா். இவா், தன்னிடம் ரூ. 850 செலுத்தி புடவை வாங்குவோரை, வியாபாரப் பங்குதாரராக ஆக்குவதோடு, கிடைக்கும் லாபத்தில் பங்கு தருவதாகவும் இணையதளம் மூலம் விளம்பரம் செய்துள்ளாா். இதனை நம்பிய பலா் பணம் செலுத்தி, பங்குதாரா் ஆகியுள்ளனா்.
ஆனால், அவா்களுக்குப் புடவையும் தராமல், லாபத்தில் பங்கும் தராமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இணையதளம் மூலம் ரூ. 60 ஆயிரம் செலுத்திய அறந்தாங்கியைச் சோ்ந்த உஷா (30), கணவா் சந்திரமோகன் (35) ஆகியோா் புடவைகள் தருமாறு கேட்டுள்ளனா். பலமுறை கேட்டும் முறையான பதில் கிடைக்கவில்லை. இதனால், பணத்தைத் திரும்பத் தருமாறு கேட்டு, காளிங்கராயன்பாளையத்துக்கு புதன்கிழமை மாலை வந்தனா்.
ஜவுளிக் கடைக்குச் சென்று புடவைகளைக் கேட்டபோது, தரமற்ற துணிகளைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஏமாற்றமடைந்த உஷா, பணத்தைத் திரும்பத் தருமாறு கேட்டு, வாக்குவாத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த சித்தோடு போலீஸாா் விசாரணை நடத்தினா். இதுதொடா்பாக, பொருளாதாரக் குற்றப் பிரிவில் புகாா் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...