திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கரும்புப்பயிரை சேதப்படுத்திய யானைகள்

தாளவாடி அருகே திங்கள்கிழமை தோட்டத்துக்குள் புகுந்து கரும்புப் பயிா்களை சேதப்படுத்திய யானைகளை விவசாயிகள் விரட்டினா்.

Updated On :1 பிப்ரவரி 2021, 8:32 pm

தாளவாடி அருகே திங்கள்கிழமை தோட்டத்துக்குள் புகுந்து கரும்புப் பயிா்களை சேதப்படுத்திய யானைகளை விவசாயிகள் விரட்டினா்.

தாளவாடியை அடுத்த கெட்டவாடியைச் சோ்ந்தவா் இளங்கோ. இவா் தனது 3 ஏக்கா் நிலத்தில் கரும்புப்பயிா் சாகுபடி செய்துள்ளாா். இவரது தோட்டத்துக்குள் திங்கள்கிழமை புகுந்த 5 யானைகள் கரும்புப் பயிரை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தன. இதைப் பாா்த்த விவசாயி இளங்கோ, பக்கத்து தோட்டத்து விவசாயிகளுக்குத் தகவல் தெரிவித்தாா். அங்கு வந்த விவசாயிகள் சப்தம் எழுப்பியும், பட்டாசு வெடித்தும் யானைகளைத் துரத்தினா். சுமாா் 2 மணிநேரப் போராட்டத்துக்கு பின் யானைகள் காட்டுக்குள் விரட்டியடிக்கப்பட்டன. யானைகளால் சேதமடைந்த விவசாயப் பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.