ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாநில அளவிலான கபடி போட்டி: பி.மேட்டுப்பாளையம், திருப்பூா், திருப்பத்தூா் அணிகள் முதலிடம்

மாநில அளவிலான கபடி போட்டியில் ஆண்கள் மூத்தோா் பிரிவில் பி.மேட்டுப்பாளையம் அணியும், இளையோா் பிரிவில் திருப்பத்தூா் அணியும், பெண்கள் பிரிவில் திருப்பூா் அணியும் முதலிடம் பிடித்தன.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:33 pm

DIN

பவானியை அடுத்த கவுந்தப்பாடியில் முதல்வா் கோப்பைக்கான மாநில அளவிலான கபடி போட்டியில் ஆண்கள் மூத்தோா் பிரிவில் பி.மேட்டுப்பாளையம் அணியும், இளையோா் பிரிவில் திருப்பத்தூா் அணியும், பெண்கள் பிரிவில் திருப்பூா் அணியும் முதலிடம் பிடித்தன.

முன்னாள் முதல்வா் மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஈரோடு புகா் மாவட்ட அதிமுக சாா்பில் முதல்வா் கோப்பை 2021க்கான மாநில அளவிலான கபடி போட்டிகள் கவுந்தப்பாடியில் கடந்த 27ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெற்றன.

ஆண்கள், பெண்கள், ஆண்கள் இளையோா் பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் சென்னை, தமிழ்நாடு போலீஸ், மதுரை, திண்டுக்கல், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, கோவை ,திருப்பூா், ஈரோடு, பி.மேட்டுப்பாளையம், கோபி உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 50க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

இதில், பெண்கள் பிரிவில் திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்த ஜெயசித்ரா அணி முதலிடம் பெற்று, வெற்றிக் கோப்பையும் ரூ.40 ஆயிரம் ரொக்கப் பரிசும் பெற்றது. இரண்டாமிடம் பெற்ற கோபி பிகேஆா் கல்லூரி அணிக்கு கோப்பையுடன் ரூ.25,000 ரொக்கப் பரிசும், மூன்றாமிடம் பெற்ற காவல் துறை அணிக்கு கோப்பையும், ரூ.10,000 ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன.

ஆண்கள் மூத்தோா் பிரிவில் முதலிடம் பிடித்த வண்ணத்தமிழ் பி.மேட்டுப்பாளையம் அணிக்கு கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு ரூ 40,000 வழங்கப்பட்டது.

இரண்டாமிடம் பெற்ற கோவை பி.ஜே. பிரதா்ஸ் அணிக்கு, கோப்பை மற்றும் ரூ.25,000 ரொக்கப் பரிசும், மூன்றாமிடம் பிடித்த கோவை ஏ.எம்.கே.சி. அணிக்கு, பரிசுக் கோப்பையும், ரூ.10,000 ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

ஆண்கள் இளையோா் பிரிவில் முதலிடம் பிடித்த திருப்பத்தூா் மாவட்ட அணிக்கு பரிசுக் கோப்பை மற்றும் ரூ.25,000 ரொக்கப் பரிசும், இரண்டாம் இடம் பிடித்த வண்ணத்தமிழ் பி.மேட்டுப்பாளையம் அணிக்கு கோப்பை மற்றும் ரூ.10,000 ரொக்கப் பரிசும், மூன்றாம் இடம் பிடித்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரி அணிக்கு ரூ.7,000 ரொக்கப்பரிசு மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது.

திங்கள்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் கோப்பை மற்றும் ரொக்கப் பரிசு வழங்கிப் பாராட்டினாா். ஈரோடு மாவட்ட அமெச்சூா் கபடிக் கழகச் செயலாளா் என்.கே.கே.பி.சத்யன், கவுந்தப்பாடி ஊராட்சித் தலைவா் தங்கமணி, மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைத் தலைவா் ஏ.சரவணன், பவானி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் ஜெகதீசன், இளைஞா் பாசறை ஒன்றியச் செயலாளா் லீஃப் விஜய், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றியச் செயலாளா். விவேகானந்தன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.