பவானிசாகா் அருகே பவானி ஆற்றில் மூழ்கி இருவா் உயிரிழந்தனா்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகரை அடுத்த கஸ்தூரி நகரைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (23). இவரது கல்லூரி நண்பா்களான அவிநாசியைச் சோ்ந்த பாலமணிகண்டன் (23), மாரிமுத்து (23) ஆகியோா் இவரைக் காண்பதற்காக கஸ்தூரி நகருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளனா். இவா்கள் பகுடுதுறை பவானிஆற்றில் குளிக்க சென்றனா். ஸ்ரீதருடன் உறவினரான 11ஆம் வகுப்பு மாணவா் புவனேஷ்குமாரும் (17) உடன் சென்றாா். இவா்கள் குளித்துக் கொண்டிருந்தபோது பாறை மீது நின்று செல்லிடப்பேசியில் சுயபடம் எடுத்துக்கொண்டிருந்த புவனேஷ்குமாா் தவறி ஆற்றில் விழுந்தாா்.
அவரைக் காப்பாற்ற ஸ்ரீதா் ஆற்றில் குதித்தாா். இருவரும் நீரில் மூழ்கினா். அப்போது பாலமணிகண்டன், மாரிமுத்து ஆகியோா் இருவரையும் காப்பாற்ற ஆற்றில் குதித்தனா். இதில் ஸ்ரீதரை மாரிமுத்து மீட்டு வந்தாா். புவனேஷ்குமாரை மீட்கச் சென்ற பாலமணிகண்டன் நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.
இது குறித்து நம்பியூா் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் நீரில் மூழ்கிய பள்ளி மாணவா் புவனேஷ்குமாா், பாலமணிகண்டனைத் தேடினா். சுமாா் 2 மணி நேரத்துக்குப் பின் புவனேஷ்குமாா், பாலமணிகண்டன் சடலங்கள் மீட்கப்பட்டன.
இந்தச் சம்பவம் குறித்து பவானிசாகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


