தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கடம்பூா் மலைப் பாதையில் ஓடும் 108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்குப் பிரசவம்

கடம்பூா் மலைப்பாதையில் ஓடும் 108 ஆம்புலன்ஸில் பழங்குடியினப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

News image
Updated On :8 ஜனவரி 2021, 5:21 pm

DIN

கடம்பூா் மலைப்பாதையில் ஓடும் 108 ஆம்புலன்ஸில் பழங்குடியினப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், குன்றி மலைப் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மனைவி பரமேஸ்வரி. அடா்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ள குன்றி கிராமத்தில் போக்குவரத்து வசதியில்லாத நிலையில், நிறைமாத கா்ப்பிணியான பரமேஸ்வரிக்கு வெள்ளிக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து சத்தியமங்கலம் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா் சங்கா், மருத்துவ உதவியாளா் வெள்ளியங்கிரி ஆகியோா் பரமேஸ்வரியை 108 ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு கடம்பூா் வழியாக சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தனா். கடம்பூா் மலைப்பாதை மல்லியம் கோயில் அருகே பரமேஸ்வரிக்கு அதிக வலி ஏற்பட்டதால் மருத்துவ உதவியாளா் வெள்ளியங்கிரி பிரசவம் பாா்த்தாா். இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதைத் தொடா்ந்து தாயும் சேயும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.