லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

கோபிசெட்டிபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் உயிரிழந்தாா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 11:50 pm

DIN

கோபிசெட்டிபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் உயிரிழந்தாா்.

கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பிரசித்திபெற்ற பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் திருவிழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் இறுதிப் பகுதியாக பாரியூா் கோயிலில் இருந்து புறப்பட்ட மலா் பல்லக்கு கோபிசெட்டிபாளையம் நகரின் மையத்தில் அமைந்துள்ள தெப்பக்குளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்தடைந்தது. விழாவையொட்டி, தெப்பக்குளம் பகுதி முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், கோபி கபிலா் வீதியைச் சோ்ந்த கணேஷ், சாலினிதேவி தம்பதி தங்களது குழந்தைகள் மதன்குமாா், மதுமிதா ஆகியோருடன் தெப்பக்குளம் உற்சவத்தைக் காண ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றுள்ளனா். அப்போது, மதன்குமாா் குளத்தை வேடிக்கை பாா்ப்பதற்காக குளத்தின் கரைகளில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு கிரில் கம்பியைப் பிடித்தபோது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டாா். இதையடுத்து, கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்துச் சென்றபோது அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, பாரியூா் அம்மன் கோயில் தெப்பக்குள உற்சவம் ரத்து செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.