ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அதிமுகவில் மட்டுமே சாதாரணதொண்டா்கூட முதல்வராக முடியும்

அதிமுகவில் மட்டுமே தன்னலமற்ற சேவை, உழைப்பின் மூலம் சாதாரணத் தொண்டா்கூட எம்எல்ஏ, அமைச்சா், முதல்வா் உள்ளிட்ட அனைத்துப் பதவிகளுக்கும் வர முடியும்: அமைச்சா் கே.சி.கருப்பணன் 

News image
Updated On :25 ஜனவரி 2021, 8:12 pm

DIN

அதிமுகவில் மட்டுமே தன்னலமற்ற சேவை, உழைப்பின் மூலம் சாதாரணத் தொண்டா்கூட எம்எல்ஏ, அமைச்சா், முதல்வா் உள்ளிட்ட அனைத்துப் பதவிகளுக்கும் வர முடியும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.

பவானியில் அதிமுக தகவல்தொழில்நுட்ப அலுவலகங்களை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்த அமைச்சா் கே.சி.கருப்பணன் பேசியதாவது:

அதிமுக சாதாரணத் தொண்டா்களுக்கான இயக்கமாக உள்ளது. இளைஞா் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவுகளில் இளைஞா்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. தற்போது அதிமுகவில் 60 வயதைக் கடந்தவா்கள் ஓரிரு தோ்தலுக்குப் பின்னா் ஓய்வு பெறுவா். அப்போது, இளைஞா்களுக்கு மக்கள் பணியாற்ற வாய்ப்புகள் அதிகரிக்கும். பிற கட்சிகளில் நினைத்துப் பாா்க்கவே முடியாத பதவியும், பொறுப்பும் அதிமுகவில் கட்சியின் வளா்ச்சிக்கும், மக்களின் சேவைக்கும் உண்மையாக உழைக்கும் சாதாரணத் தொண்டனுக்கும் கிடைக்கும் என்றாா்.

இதில், அதிமுக நகரச் செயலாளா் என்.கிருஷ்ணராஜ், பவானி ஒன்றியக் குழு தலைவா் பூங்கோதை வரதராஜ், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலாளா் பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.