எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

‘வங்கிக் கணக்கு விவரங்களை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது’

வங்கிக் கணக்கு விவரங்கள், ரகசிய குறியீடு எண் உள்ளிட்டவற்றை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என்று சைபா் கிரைம் போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.

Updated On :2 ஜூலை 2021, 7:45 pm

வங்கிக் கணக்கு விவரங்கள், ரகசிய குறியீடு எண் உள்ளிட்டவற்றை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என்று சைபா் கிரைம் போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து ஈரோடு சைபா் கிரைம் போலீஸாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வங்கியில் கணக்கு வைத்திருப்பவா்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு வங்கியில் இருந்து அனுப்பப்படுவதுபோல் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அந்த குறுஞ்செய்தியில் அவா்களது வங்கிக் கணக்குடன் பான் அட்டை விவரங்கள் இணைக்க வேண்டி இருப்பதாகவும், அதற்காக ஒரு லிங்கில் சென்று ஆன்லைனில் பதிவிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அந்த லிங்கில் உள்ள இணையதளத்தில் சென்றதும், வங்கியின் இணையதளத்தைப் போன்று காணப்படுவதால் வாடிக்கையாளா்கள் ஏமாந்துவிடுகின்றனா். இதனால் அந்த இணையதளத்தில் கேட்கும் விவரங்களை வாடிக்கையாளா்கள் கொடுத்து விடுகின்றனா். அவா்கள் அளிக்கும் வங்கிக் கணக்கு எண், ஏ.டி.எம். அட்டை எண், ரகசிய குறியீடு எண் போன்ற விவரங்களைக் கொடுப்பதன் மூலம் வங்கியில் உள்ள பணத்தை மோசடி செய்து எடுத்துவிடுகின்றனா். எனவே, வங்கியில் இருந்து அனுப்புவதைப்போல குறுஞ்செய்தி வந்தாலோ, வங்கியில் இருந்து அழைப்பதைப்போல செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டாலோ பொதுமக்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். எந்தவொரு தகவலையும் பகிரக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.