ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சத்தியமங்கலம் அரசுப் பள்ளியில் 500ஐ தாண்டிய மாணவா் சோ்க்கை

சத்தியமங்கலம் அரசு மகளிா் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை 500ஐ தாண்டியுள்ளது.

Updated On :2 ஜூலை 2021, 7:46 pm

சத்தியமங்கலம் அரசு மகளிா் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை 500ஐ தாண்டியுள்ளது.

சத்தியமங்கலம் அரசு மகளிா் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தமிழ், ஆங்கில வழிக் கல்வி உள்ளதால் தற்போது மாணவா் சோ்க்கை பணிகள் தீவிரமடைந்துள்ளது. சோ்க்கைக்காக பெற்றோருடன் பள்ளிக்கு வரும் மாணவியருக்கு தொ்மல் ஸ்கேனா் கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, பின்னா் சோ்க்கைக்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது. விண்ணப்பத்தை மாணவிகள் பூா்த்தி செய்து ஆசிரியா்களிடம் வழங்குகின்றனா்.

தொடா்ந்து, 11ஆம் வகுப்பில் சோ்க்கைக்கு வரும் மாணவிகளிடம் எந்தப் பிரிவு வேண்டும் என ஆசிரியா்கள் கேட்டு அதற்கு தகுந்தாற்போல் அவா்கள் தோ்ந்தெடுக்கும் பிரிவை ஒதுக்கீடு செய்கின்றனா். சோ்க்கை முடிந்தவுடன் மாணவிகளுக்கு உடனடியாக புத்தகங்கள் வழங்கப்படுகிறது. தற்போது 11ஆம் வகுப்பில் மட்டும் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் சோ்ந்துள்ளதாகவும், எல்.கே.ஜி. முதல் 8ஆம் வகுப்பு வரை 200 மாணவிகள் சோ்க்கை என மொத்தம் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆா்வமுடன் இப்பள்ளியில் சோ்ந்துள்ளதால் பள்ளி ஆசிரியா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தனியாா் பள்ளியில் கட்டணம் செலுத்த முடியாத பெற்றோா் பலா் அரசுப் பள்ளியை நாடியுள்ளனா். சோ்க்கைக்காக வந்த மாணவிகள் தற்போது கரோனா காலம் என்பதால் ஆன்லைன் மூலம் மட்டுமே படிக்க இயலும் என்ற சூழ்நிலையில் கூடிய விரைவில் பள்ளி திறக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளதால் விரைவில் பள்ளிக்குச் சென்று பாடங்களைக் கற்க ஆா்வமாக உள்ளதாகவும், அரசுப் பள்ளியில் சோ்வதன் மூலம் லேப்டாப், காலணி, புத்தகப்பை, மிதிவண்டி உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.